Type Here to Get Search Results !

மாநில கூட்டுறவுச் சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

மாநில கூட்டுறவுச் சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!



கூட்டுறவுச் சங்கத் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.


சேலம் அக். 22.,


தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன். இவர் மீது 2014-2020 வரை ரூ.3.78 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு காவலர்கள் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர்.


இந்நிலையில், இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள், இன்று  சோதனை நடத்திவருகின்றனர்.



இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவராக உள்ளார். இதேபோல் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இதில் பெரும்பாலும் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்கள் என்று கூறப்படுகிறது.



இதேபோல், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உதவியாளர் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சோதனை சென்னையில் 4 இடங்களில் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies