அலுவல் ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரி அல்ல - தலைமைச் செயலர் இறையன்பு
அலுவல் ரீதியாக துறையின் செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரி அல்ல என, தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு இன்று (அக்.26) அனைத்து துறை செயலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், ஒவ்வொரு துறையிலும் ஒன்றிய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் திட்டங்கள் என்னென்ன, மாநில அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் விவரம், திட்டம் பயன் அடைந்ததா உள்ளிட்டவை குறித்து ஆளுநருக்கு விளக்கமளிக்கும் வகையில் அனைத்து துறை செயலர்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
திட்ட அறிக்கை கணிணி மூலம் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கமளிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அலுவல்ரீதியாக துறையின் செயலர்களுக்கு இறையன்பு அனுப்பிய கடிதம், முன்னதாக விவாதப் பொருளாக மாறியது.
இதையடுத்து அவர் தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அலுவல்ரீதியாக துறையின் செயலர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.