தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், 16 மாவட்டங்களில் 14 அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மாவட்டம் தோறும் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அமைச்சர்கள் சிலர் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இயற்கை சீற்றம், நோய்த் தொற்று போன்ற இன்னபிற நேரங்களில் அவசரகாலப்பணிகளை கூடுதலாக மேற்கொள்வார்கள்.
இதையடுத்து, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் தமிழக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட பொறுப்பாளராக நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் கே.என்.நேரு |
கோவை மாவட்ட பொறுப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் வி.செந்தில் பாலாஜி |
தேனி மாவட்ட பொறுப்பாளராக கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் ஐ.பெரியசாமி |
திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
![]() |
| அமைச்சர் எ.வ.வேலு |
தருமபுரி மாவட்ட பொறுப்பாளராக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் |
தென்காசி மாவட்ட பொறுப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் |
ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளது.
![]() |
| அமைச்சர் தங்கம் தென்னரசு |
காஞ்சீபுரம் மாவட்ட பொறுப்பாளராக ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் தா.மோ. அன்பரசன் |
நெல்லை மாவட்ட பொறுப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் |
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் ஆர்.காந்தி |
திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் அர.சக்கரபாணி |
பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் |
தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி |
மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
![]() |
| அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் |
இதையடுத்து, மொத்தமாக 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக தமிழக 14 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















