வால்பாறை அக் 15.,
வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வ.நேத்ரா முதல் வகுப்பும், வ.விதுல் இரண்டாம் வகுப்பும் பயின்று வருகிறார்கள். இவர்கள் ஓவியம் வரைதல், தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை மனனம் செய்து ஒப்புவித்தல், கதை கூறுதல், காகிதங்களில் பல்வேறு வேடிக்கை உருவங்கள் செய்தல், மரம் நடுதல், மாறுவேடம், முகச்சாயம் பூசுதல் போன்ற பல்துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
மேலும், இவர்கள் பல்வேறு உலக சாதனை முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். அமைதிக்கான உலக அளவிலான விருதுகள், IEA World Record, YouTube Star உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளனர்.
இதனை ஊக்குவிக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், தமிழக சமூக நலத்துறை இணை இயக்குநர் தனசேகரபாண்டியன், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட சைல்டுலைன் இயக்குநர் தேவன்பு ஆகியோர் இணைந்து இவர்களுக்கு மாணவர்களுக்கான சிறந்த விருதான "அப்துல் கலாம்" விருதினை கொடுத்து கவுரவித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் பள்ளி ஆசிரியர்களும், சக நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.