லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்எல்ஏவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.பி. வேலுமணி அமைச்சர் பதவியில் இருக்கும்போது டெண்டர் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், நேற்று சோதனை நடைபெற்றது. நடத்தப்பட்ட சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேணுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட சோதனை என்று அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தனது ட்விட்டர் பக்கத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கும், (2/3)
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற (1/3) pic.twitter.com/9l4PZ2LL5S
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021

