திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில், ஐடி ரெய்டு நடந்து வரும் நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் கிருஷ்ணாபுரத்தில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும், வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.


