பிரபல திரைப்பட நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நடிகர் செந்தில் பல ஆண்டுகளாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர், அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். தற்போது, அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த நடிகர் செந்திலை செய்தியாளர்கள் சந்தித்த போது, பாஜக நல்ல கட்சி. ஊழலற்ற ஆட்சியை செய்துகிட்டு வர்றாங்க. அது எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக இந்த ஆட்சி தமிழகத்தில் காலூன்றும். பாஜகவுக்கு ஆதரவாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் பிரச்சாரம் செய்வேன். அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்வது குறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். தலைமை பிரச்சாரம் செய்யச் சொன்னால் பிரச்சாரம் செய்வேன் என்றார்.
பாஜகவில் நடிகர் ராதாரவி, நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், நடிகை குஷ்பு, நடிகை கவுதமி, நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் அனுமோகன், நடிகர் எஸ்.வி.சேகர், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறார்கள்.
தற்போது, அந்த பட்டாளத்துடன் நடிகர் செந்திலும் இணைந்டுவிட்டார். புதிய தகவலாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
எனது முதல் ட்விட்டர் பதிவு! pic.twitter.com/aLkviWVdDQ
— Senthil (@SenthilComedian) December 18, 2020
தமிழ்நாடு பிஜேபி கட்சியில் இணைந்ததில் மகிழ்ச்சி!
— Senthil (@SenthilComedian) March 11, 2021



