அதிமுகவின் இப்போது எம்எல்ஏவாக இருக்கும் 41 பேருக்கு அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், இவர்கள் அனைவரும் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். எந்தப் பக்கம் தாவலாம் என்ற மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். சிலர் வெளிப்படையாகவே தேர்தல் பணிகளை செய்யமுடியாது என்றே அறிவித்துவிட்டனர்.
சற்றும் தளராத சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், சற்று வித்தியாசமான பாணியைக் கையாண்டார். நேற்று மாலை சீட் மறுக்கப்பட்ட நேரத்தில், இன்று காலை புத்துணர்ச்சியோடு அமமுகவில் இணைந்துவிட்டார். டிடிவி தினகரனும் அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சீட் மறுக்கப்பட்டதற்கு ராஜேந்திர பாலாஜியைக் குற்றஞ்சாட்டிய அவர், சாபமும் விட்டார்.
சசிகலாவிற்கு துரோகம் செய்தவாக என்று தலைமையையும் விமர்சித்தார். இதையடுத்து, அதிமுக அவரை அதிரடியாக நீக்கியது. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறினார். மேலும் அவர் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும், நான் தோற்கடிப்பேன் என்று பகீரங்கமாக சவால் விடுத்திருக்கிறார்.


