வால்பாறை சோலையார் எஸ்டேட் மூன்றாம் டிவிசனைச் சேர்ந்த மணி சந்திரிகா அவர்களின் மகன் ஆகாஷ் என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது.
அப்போது, சுமார் 4 மணி அளவில் அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த சிறுத்தை, ஆகாஷை தாக்கியது. ஆகாஷுடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் கதறிய சத்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் திரண்டு ஓடிவந்ததும், சிறுவன் சிறுத்தை ஆகாஷை கீழே போட்டுவிட்டு ஓடியது. உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக சோலையார் கார்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிறகு வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கும்படி வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றி கூறிய வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் T.K. அமுல் கந்தசாமி, சிறுவனை சிறுத்தை கடித்த செய்தி கேட்டு பதறிப்போனேன். சிறுவன் ஆகாஷை நலமுடன் பெற்றோரிடம் சேர நானும் பிராத்திக்கிறேன்.



