Type Here to Get Search Results !

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.


திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.கட்சி தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் மெரினா சென்ற அவர், அங்குள்ள அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.


கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி


சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி


ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன் திமுக சார்பில் போட்டி


காட்பாடியில் துரைமுருகன் போட்டி


கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரனுக்கு எதிராக திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டி, தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டி,போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி


மாதாவரம் சுதர்சனம், மதுரவாயல், கணபதி, சைதை மா.சுப்பிரமணியன், அண்ணாநகர் மோகன்,பரமக்குடி தனித்தொகுதி -முருகேசன் , திருச்சுழி – தங்கம் தென்னரசு , அருப்புக்கோட்டை -எஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன் , விருதுநகர் -கே .ஆர் சீனிவாசன், போடி – தங்க தமிழ்செல்வன் – திருச்சி மேற்கு கே.என். நேரு


பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,நாகர்கோவில் -என். சுரேஷ் ராஜன்கன்னியாகுமரி ஆஸ்டின், ராதாபுரம் அப்பாவு,பாளையங்கோட்டை அப்துல், அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்,திருநெல்வேலி – எஸ் லட்சுமணன்ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா,சங்கரன்கோவில் தொகுதி – இ.ராஜா, ஒட்டப்பிடாரம் தொகுதி- சண்முகையா


திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி – கீதா ஜீவன்,விளாத்திகுளம் – மார்க்கண்டேயன்,சோழவந்தான் தனித்தொகுதி -வெங்கடேசன்,முதுகுளத்தூர் – ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் – காதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம்


ஆத்தூர் – ஐ பெரியசாமி ,ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி ,பழனி -செந்தில்குமார் ,பொள்ளாச்சி – வரதராஜன் , கிணத்துக்கடவு – பிரபாகரன் , சிங்காநல்லூர் -கார்த்திக், தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாபதி திருப்பூர் தெற்கு – செல்வராஜ், மண்ணச்சநல்லூர் – கதிரவன். திருச்சி வடக்கு – இனிகோ இருதயராஜ் , திருச்சி மேற்கு கே.என். நேரு, கரூர்- செந்தில் பாலாஜி, முசிறி- தியாகராஜன், விருதுநகர் – சீனிவாசன்


ஆண்டிபட்டி -மகாராஜன் ,மதுரை மேற்கு – சின்னம்மாள், மதுரை வடக்கு – தளபதி , சோழவந்தான் – வெங்கடேசன் ,மதுரை கிழக்கு – மூர்த்தி , மானாமதுரை- தமிழரசி , திருப்பத்தூர் -கேஆர் பெரியகருப்பன் விராலிமலை – பழனியப்பன் , பட்டுக்கோட்டை – அண்ணாதுரை, தஞ்சை- நீலமேகம், திருவையாறு- துரை சந்திரசேகரன், கும்பகோணம் – அன்பழகன், திருவிடைமருதூர்- கோவை செழியன் , நன்னிலம் – ஜோதிராமன் , திருவாரூர் – பூண்டி கலைவாணன், மன்னார்குடி – ராஜா , வேதாரண்யம் -எஸ்கே வேதரத்தினம், பூம்புகார்- நிவேதா முருகன், குறிஞ்சிப்பாடி -எம் .ஆர் .கே .பன்னீர்செல்வம், கடலூர் – ஐயப்பன் ,செங்குன்றம் – கண்ணன் ,பெரம்பலூர் – பிரபாகரன், துறையூர்- ஸ்டாலின் குமார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies