சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீட்டில் பாமகவிற்கு பூந்தமல்லி தொகுதியை ஒதுக்கியதை கண்டித்து, அதிமுகவினர் சாலைமறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது. பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது.
பாமக போட்டியிடும் தொகுதிகள் 1.ஜெயம்கொண்டம், 2.திருப்போரூர், 3.வந்தவாசி, 4.நெய்வேலி, 5.திருப்பத்தூர், 6.ஆற்காடு, 7.கும்மிடிப்பூண்டி, 8.மயிலாடுதுறை, 9.பொண்ணாகரம், 10.தர்மபுரி, 11.விருதாச்சலம், 12.காஞ்சிபுரம், 13.கீழ்பெண்ணாத்தூர், 14.மேட்டூர், 15.சேலம், 16.சோளிங்கர், 17.சங்கராபுரம், 18.சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, 19.பூந்தமல்லி, 20.கீழ்வேளூர், 21.ஆத்தூர், 22.செஞ்சி, 23.மைலம் ஆகிய 23 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.
பாமகவிற்கு ஒதுக்கிய 23 தொகுதிகளில், பூந்தமல்லியை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நசரத்பேட்டை சாலை சிக்னல் அருகே, அதிமுகவினர் பெருமளவில் திரண்டு மறியல் செய்து வருகின்றனர். அதிமுகவினரின் சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.



