அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று புதிய நீதிக் கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த புதிய நீதிக்கட்சி, 9 இடங்கள் வரை கேட்ட நிலையில், அதிமுக தரப்பில் புதிய நீதிக்கட்சிக்கு அதிகபட்சமாக 2 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முன்வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த புதிய நீதிக்கட்சி, கூட்டணியிலிருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் புதிய நீதிக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதிய நீதிக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2000ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், 2014ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை.அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி சண்முகம் வெளியிட்டுள்ளார்.


