சட்டமன்ற தேர்தலையொட்டி ராயபுரம் தொகுதியில் அமைச்சர் D.ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் போட்டியிடுகிறார். சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் D.ஜெயக்குமார் 7வது முறையாக போட்டியிடுகிறார். மேலும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதன், நிலக்கோட்டையில் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் D.ஜெயக்குமார், ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 7வது முறையாக போட்டியிடுகிறேன். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடரும். அதிமுக கூட்டணியை பொறுத்தவரை எந்தவிதமான விரிசலோ, உரசலோ, கருத்து வேறுபாடோ இதுவரை இல்லை என்றார்.


