Type Here to Get Search Results !

சசிகலாவுக்கு உரிய மரியாதையை கொடுக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூது!

சசிகலா கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வழியில் ஆதரவாளர்களிடம் நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று பேசினார். தற்போது, அரசியலை விட்டே ஒதுங்க நினைத்தது ஏன் என்பதற்கு தினம் ஒரு தகவல் பரவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூதுவர் மூலம் அனுப்பிய தூது  காரணமாகத்தான் சசிகலா அந்த அதிரடி முடிவை எடுத்ததாக ஒரு தகவல் பரவுகிறது.


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  தூது சென்றவர் சசிகலாவிடத்தில், நீங்க சொன்னபடிதான் முதல்வரும் ஆட்சியை நடத்திட்டு வருகிறார். இடையில் தினகரனால் சில குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவரை தினகரனை வெளியேற்ற வேண்டியதாகிவிட்டது. பாஜக தரப்பில் சில அழுத்தங்களையும் சமாளித்துக்கொண்டு ஆட்சியை நடத்தினோம். இதை புரிந்துகொள்ளாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் தினகரன். இதை சிறையில் இருந்த உங்களிடத்தில் தெரியப்படுத்த பலமுறை முயன்றோம். ஆனால், தினகரன் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். நீங்கள் வெளியே வந்த பிறகும் கூட உங்களை சந்திக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. இந்தநிலையில் கூட  தினகரன் திமுகவுடன் இணைந்து கொண்டு அதிமுகவுக்கு எதிரான வேலைகளை பார்க்கிறார். ஆனால், வெளியே திமுக அழிக்க அதிமுகவோடு இணைய தயார் என்று ஒப்புக்காக பேசிக்கொண்டிருக்கிறார்.


நீங்கள் பெங்களூருவில் இருந்து வந்ததும், அனைத்து கோவில்களுக்கும் சென்று மனமுருக வேண்டும் என்றுதான் நீங்கள் நினைத்ததாக முதல்வர் கேள்விப்பட்டுயிருக்கிறார். அதனால், இப்போதைக்கு எதைப்பற்றியும் நீங்கள் அலட்டிக்கொள்ளாமல் அதையே செய்யச்சொல்லி இருக்கிறார் முதல்வர்.


நடக்கவிருக்கும் தேர்தலில் எப்படியாவது அதிமுக ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜெயித்ததும், உங்களுக்கு கொடுக்கவேண்டிய உங்களுக்கு உண்டான உரிய மரியாதையை கொடுக்க இருப்பதாக முதல்வர் சொல்ளியிருக்கிறார். இது சத்தியம். என்று சசிகலாவிடம் சொல்லி இருக்கார் தூதுவர்.


பதிலுக்கு சசிகலாவும், நானும் தினகரனை நம்பி நிறைய பணத்தை கொடுத்திட்டேன். அதுக்கெல்லாம் கணக்கே இல்ல. இதுல, இன்னும் தேவை இருக்குதுன்னு சொல்லுறாரு. அவரை நம்பி கொடுக்குறதா வேண்டமான்னுதான் யோசனையா இருக்குதுன்னு தூதுவரிடம் வேதனையில் புலம்பியிருக்கிறார்.


நீங்க எதற்கும் அலட்டிக்காம இருங்க. அமைதியா இருங்க. உங்களுக்கு உரிய கவுரவம் உங்களை தேடிவரும் என்று மீண்டும் நம்பிக்கை சொல்லிவிட்டு போயிருக்கிறார் அந்த தூதுவர்.


இந்த சந்திப்புக்கு பிறகுதான், தான் அரசியலை விட்டே விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். கொரோனாவில் இருந்து மீண்டு பெங்களூரு விடுதியில் தங்கி இருந்தபோது, ஒரு செய்திக்காக  காத்திருக்கிறேன். அது வந்ததும் புறப்படலாம் என்று இருக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார் சசிகலா. அந்த செய்தி வராததால்தான் அவர் கடுப்பில் புறப்பட்டு வரும் வழியில், ஆதரவாளர்களிடம் வெடித்திருக்கிறார்.


அன்று அந்த செய்தி செல்ல வாய்ப்பில்லாமல் போனதால், தற்போது கிடைத்த வாய்ப்பில் தூதுவர் மூலமாக செய்தி சென்றிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies