தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளது.
இதுகுறித்து பேசிய திருமாவளவன், சனாதன ஆபத்துகளில் இருந்து தமிழகத்தையும், மக்களையும் பாதுகாக்கும் யுத்தம் இந்த தேர்தல். பல்வேறு மாநிலங்களில் சூழ்ச்சிகளை செய்து ஆட்சிக்கு வந்த பாஜகவால், தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். வாக்குகள் சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும்; கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது என்றார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் போட்டியிட விரும்பும் வேளச்சேரி, கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோயில், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல, திட்டக்குடி, சோழிங்கநல்லூர், புவனகிரி, குன்னம், மயிலம் ஆகிய தொகுதிகளின் பட்டியலையும் திமுகவிடம் விசிக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

