அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இந்தநிலையில், இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டனர். இதில், அமைச்சர்களாக இருக்கும் இரண்டு விஜயபாஸ்கருக்கும் அதே தொகுதிகளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆவடியில் பாண்டியராஜனுக்கும், மதுரவாயிலில் பென்ஜமினுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், க. பாண்டியராஜன், வேலுமணி ஆகியோருக்கு அவரவர் தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜலெட்சுமிக்கு சங்கரன்கோவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூர், அமைச்சர் ஆர்பி உதயகுமார் திருமங்கலம் போட்டி.
மேலும், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு, அமைச்சர் காமராஜ் நன்னிலம், அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேதாரண்யம், அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல், அமைச்சர் சரோஜா ராசிபுரம், அமைச்சர் ராமச்சந்திரன் ஆரணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகிய மூவருக்கும் இம்முறை வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.


