சசிகலாவுக்கு ஆதரவாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வசிக்கும் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சசிகலா, தற்போது பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். அவர் வரும் 8ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
சசிகலாவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அமமுகவினர் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிமுகவினர் சசிகலா பக்கம் திரும்பாத வண்ணம் தடுக்க அதிமுக தலைமை பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த போஸ்டர்கள் அனல் பறக்கின்றன.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய சில அதிமுகவினர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், சசிகலாவுக்காக போஸ்டர் ஒட்டுவதை அதிமுகவால் தடுக்க முடியாத சூழலே தற்போது நிலவுகிறது
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வசிக்கும் பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக அமமுகவினர் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ‘எங்கள் ராஜமாதாவே’.. ‘எடுத்த சபதம் முடிப்பேன்’ என்றெல்லாம் அதில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஒட்டப்பட்டு வந்த போஸ்டர்கள் தற்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் வீடுகளுக்கு அருகே ஒட்டப்பட்டிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


