ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார் பழனி மலை முருகன். இக்கோவில் மூன்றாம் படை வீடாக விளங்கி வருகிறது. மேலும், இந்த கோயிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போக்கும் அருமருந்தாக உள்ளது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் அவர்களை கவரும் விதமாக, கோயில் நிர்வாகம் சார்பில் 'செல்பி ஸ்பாட்' என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
பழனி மலை அடிவாரம் தண்டாயுதபானி நிலையம் மற்றும் மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் 'நம்ம பழனி' என்ற வாசகங்களுடன் கூடிய பெயர் பலகை மின்விளக்குடன் வைக்கப்பட்டுள்ளது.
இதனை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்



