Type Here to Get Search Results !

காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிடும் அற்பப்பிறவிகள்: சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்த டி.டி.வி.தினகரன் #Minister_CV_Shanmugam #TTV_Dinakaran

ஊடகங்களிடம் டிடிவி பேசியபோது, சி.வி.சண்முகத்தின் பேச்சு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், சி.வி.சண்முகம் நிதானமாகத் தான் பேசினாரா என்று அறிய வேண்டும் என்றார். 


அதாவது சண்முகம் மது போதையில் உளறியிருப்பார் என மறைமுகமாகச் சாடியிருந்தார். டிடிவி.தினகரன்  பேச்சு குறித்து இன்று பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை ஒருமையில் சரமாரியாக திட்டிவிட்டார்.


அவர் பேசியபோது, “என்னை நிதானமாகப் பேசினாரா என்று டிடிவி கேட்கிறார். ஆமா இவர் தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது டிடிவி தினகரனோட குலத்தொழில் அதான். ஊத்தி ஊத்திக்கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க அவனுங்க. கூவத்தூர்ல அது மாறி தான் ஊத்தி கொடுத்தான்… இல்லைனு சொல்ல சொல்லு அவன” என்று பயங்கரமாகத் தாக்கி பேசினார்.


பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு, வானுக்கும், மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு டி.டி.வி.தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.


நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து.


மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது


பதவி வெறி படுத்தும்பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies