Type Here to Get Search Results !

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மோடி மரியாதை #MGR #Jayalalithaa #MODI

4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அந்த அரசு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை துணை முதல்வர் ஓபிஎஸ்சும் முதல்வர் பழனிசாமியும் பொன்னாடை போற்றி வரவேற்றனர். அவருக்கு சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினர்.


பின்னர், மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார் மோடி.


பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, ரூ.100 கோடி மதிப்பில் சென்னை ஐஐடியில் கட்டப்படவிருக்கும் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.


இதையடுத்து அவர் பேசியபோது, ’’வணக்கம் சென்னை..வணக்கம் தமிழ்நாடு’’ என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.


சென்னையில் தனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த மோடி, சென்னை அறிவு மற்றும் படைப்பாற்றல் கொண்ட நகரம். இந்த திட்டங்கள் புதுமை மற்றும் சுதேச வளர்ச்சியின் அடையாளங்கள் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies