சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சென்னை என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அதில், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல நலத்திட்டங்களை மோடி தொடக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில், வணக்கம் சென்னை..வணக்கம் தமிழ்நாடு என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் மோடி. அப்போது பேசிய அவர், சென்னையில் எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அறிவு மற்றும் படைப்பாற்றல் கொண்ட நகரம். இந்த திட்டங்கள் புதுமை மற்றும் சுதேச வளர்ச்சியின் அடையாளங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து, நீர்வளங்களையும் உணவு உற்பத்தியையும் நன்கு பயன்படுத்திய தமிழக விவசாயிகளை பாராட்ட விரும்புகிறேன். தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, எந்த ஒரு இந்தியனும் இந்த நாளை மறக்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்ப, #PulwamaAttack நடந்தது. அந்த தாக்குதலில் நாங்கள் இழந்த அனைத்து தியாகிகளுக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். எங்கள் பாதுகாப்புப் படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் துணிச்சல் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் கூறினார்.



