மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தொடர்ந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கவும் கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
எட்டு வழி சாலை போன்ற எந்த திட்டங்களையும் தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன என்பதை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறின.
முதல்வர் வேட்பாளர் கமல் என்றும், தேர்தலில் வென்று கமலை முதல்வர் ஆக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தை சீரமைப்போம் என்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற கமல்ஹாசன், சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வருகிறார்.
ஆனாலும், காணொளி மூலமாக பிரச்சார, கட்சி நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஓவைசியுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் பேச்சு இருக்கும் நிலையில் இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவினை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதுகுறித்து பொதுக்குழுவில் தீர்மானம் எதுவும் நிறைவேறவில்லை.




