Type Here to Get Search Results !

வருமான வரி தாக்கல் செய்வதற்கானஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது: தாக்கல் செய்யவில்லையா? இப்போ என்ன செய்யலாம்! #IncomeTax

அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவடைந்ததாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 2019-2020 கான   நிதியாண்டு, அபராதமின்றி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் வரை வழங்கப்பட்டுது. இந்த அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 15-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்ற அரசு, அபராதமின்றி தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.


இதையடுத்து, வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கு மேல், வருவாய் ஈட்டுவோர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, இன்று முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். 


அதாவது, அடுத்த மாதம் 31ஆம் தேதிக்கு பிறகு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies