Type Here to Get Search Results !

போலீஸ்காரரின் செம ஐடியா..! இது எப்படி இருக்கு...!!!: மூன்று நாள் மனைவி…! மூன்று நாள் காதலி..! ஒரு நாள் ரெஸ்ட்.!

உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணமான  வாழ்க்கை  போர் அடித்ததால் சைடு கேப்பில் இன்னொரு பெண்ணையும் காதலிக்க தொடங்கியிருக்கிறார். 


இதில், இவர் முரட்டு சிங்கிள் என்று நினைத்து ராஜேஷின் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார். இதில், இரண்டு பக்கமும் எந்த குறையும் வைக்காமல் அழகாக இரு உறவுகளையும் மெய்ன்டெய்ன் செய்துவந்திருக்கிறார். நடுவே காதலிக்கும் மூன்று முடிச்சு போட்டிருக்கிறார். எவ்வளவு சாதுரியமாகத் திருடினாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப ராஜேஷ் மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிவிட்டார்.


இந்தநிலையில், மனைவி சதார் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது புகாரளிக்க, மறுபுறம் தனது மகளைக் கடத்திவிட்டதாக காதலியின் பெற்றோர் புகாரளிக்க இருதலைக் கொள்ளி எறும்பாக அகப்பட்டுக் கொண்டார் ராஜேஷ் எனும் ரொமேன்டிக் திருடன். உண்மையில் ட்விஸ்ட் இதுவல்ல. இதில், ரெண்டு பக்கமும் எந்த பங்கமும்  வராமல் போலீஸ்காரர்கள் பஞ்சாயத்து பேசியது தான் ரியல் ட்விஸ்ட்.



இதையடுத்து, வாரத்தின் முதல் மூன்று நாட்கள் மனைவியுடனும், அடுத்த மூன்று நாட்கள் காதலியுடனும் இருக்க வேண்டுமாம். கடைசி ஒரு நாளில் அவர் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதில், யாரிடமும் இல்லாமல் தனக்காக நேரத்தைச் செலவிட அந்த விடுமுறை ராஜேஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. "எதுக்கு இன்னொரு பிகர மடிக்கிறதுக்கா ஆபிஸர்". இதற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் போட்டுக்கொடுத்தது தான் ஹைலைட்.


எனினும், இந்த ஒப்பந்தம் சிறிது நாட்களிலேயே அவரது காதலியால் முறிக்கப்பட்டது. இந்தநிலையில், ராஜேஷ் தன்னை திருமணம் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எப்ஐஆர் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 

அவருக்கு தற்போது பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், திருமணம் செய்து ஒழுங்காக வாழாமல் பிகர் பின்னாடியே சுத்தியதன் காரணமாக இன்று அவர் பின்னால் போலீஸ் சுத்துகிறது. வாழ்க்க ஒரு வட்டம்னு சும்மாவா தளபதி சொன்னாரு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies