சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். கூடுதலாக, 3 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
— Sivaangi Krish (@Sivaangi_Offi) February 13, 2021
இந்நிலையில், மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. இதுநாள் வரை திமுக மட்டுமே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவந்த நிலையில், தற்போது நடிகர் நடிகைகளும் இந்த வேலையை தொடங்கியுள்ளனர். நடிகை ஓவியாவும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackModi என ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து, ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்தோவியம் வரைந்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் #GoBackModi என ட்வீட் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது ரசிகர்களும் #GoBackModi என பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.


