பிரதமர் வருகை குறித்த நடிகை ஓவியாவின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வரும் மோடி, அரசு விழாவில் கலந்துகொள்ளகிறார். அதாவது, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார். சென்னை வரும் மோடிக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் சார்பில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
இந்தநிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக நடத்தி வரும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி தமிழகம் வருவற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


