Type Here to Get Search Results !

டிராக்டரில் முதல்வர்–துணைமுதல்வர் பயணம்: அமைச்சர் விஜயபாஸ்கர் டிராக்டரை ஓட்டி வந்தார் #EPS #OPS #ADMK

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-குன்னத்தூரில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் திரளான மக்கள் நடுவே டிராக்டரில் வருகை தந்த தந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் டிராக்டரை ஓட்டி வந்தார்.

பல மாவட்டங்களின் வறட்சியை தீர்க்க ”காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்பு” திட்டத்தை முதலவரும் தமிழக துணைமுதல்வரும் இன்று பூமிபூஜை செய்து பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


3,384 கோடியில் காவேரி உப வடிநில நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை புனரமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.


காவிரி வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டமானது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவாகும். மழை வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் அதிக அளவிலான நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுப்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி இன்று தொடங்கப்பட்டது.


காவிரியில் வழியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வறண்ட பகுதிகள் வழியாக குழுவுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது.

ஒரு கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலமாக திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும் 42 ஆயிரத்து 570 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 118. 45 கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டளைகள் வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகின்றது.


இரண்டாவது கட்டமாக புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் 220 ஏரிகளும் 23. 245 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றில் இருந்து 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது.


மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 34 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரைக்கும் இணைக்கப்படுகின்றது.

14,400 கோடி ரூபாயில் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ள காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதினால், தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். அதேநேரம் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies