உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக மதுராந்தகத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமா வருகை தந்தார். விழாவைச் சிறப்பித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார்.
ஆனால், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். கூட்டணியில் எங்களுக்கு ஓரிரு தொகுதி கொடுத்தால் கூட்டணியில் தொடர மாட்டோம் என ஏற்கனவே மண்டல கூட்டத்திற்குப் பிறகு அறிவித்திருக்கிறோம். அதேபோல் தனிச் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்பதையும் ஏற்கனவே எங்கள் கட்சிசார்பில் தெரிவித்திருக்கிறோம்.
மேலும், சசிகலா அதிமுகவுடன் சேர வாய்ப்பு உள்ளதா என்பதை அது அவர்கள் இருவரும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். சசிகலா ஏற்கனவே இயக்கத்திலிருந்து இருக்கிறார். பிறகு வெளியேறியிருக்கிறார். அவர்கள் இருவரும் சேருவது பற்றி அவர்கள்தான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.


