யாருடைய காலில் விழுந்து பதவியேற்றாரோ பழனிச்சாமி: இப்போ அவருக்கே துரோகம் செய்துவிட்டார். தமிழ்நாட்டில் சுயமரியாதை இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி விமர்சித்து வருகிறார்.
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி நேற்று மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மதுரை முனிச்சாலை பகுதியில் வாகன பரப்புரை மேற்கொண்ட அவர் மக்கள் மத்தியில் பேசினார்.கனிமொழியின் கண்ணுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள் தெரியவில்லை என்றால், அவருக்கு கண் சரியாக தெரியவில்லை என்று அர்த்தம் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.வேடிக்கையாக பேசுவது.
கண்ணில் கோளாறு என்றால் சரி செய்து விடலாம்; ஆனால், நீங்கள் தமிழ்நாட்டுக்கே கோளாறாக உள்ளீர்கள். தமிழ்நாட்டில் சுயமரியாதை இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதனால், எதிர்காலத்தில் ரேஷன் கடைகளில் கூட விலை பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலைமை உள்ளது. ஆனால், அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சசிகலா மீண்டும் வந்துள்ளார். யார் கையில் கட்சி செல்லப் போகிறது என்று தெரியவில்லை. அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்து வருகின்றனர். யார் காலில் விழுந்து பதவியேற்றாரோ அவருக்கே பழனிச்சாமி துரோகம் செய்து வருகிறார். அதேபோல தொடர்ந்து மக்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.
ஜெயலலிதா மனதில் சந்தேகம் என்று கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், துணை முதல்வர் ஆனதும் அதை மறந்து விட்டார். ஒருமுறைகூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தமிழகத்தை மீட்டு எடுக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது. விரைவில் அதிமுகவின் ஆட்சியை நாம் நிராகரிப்போம் என்றார்.


