பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிவராஜ் சித்த வைத்தியர் சாலை சுமார் ஏழு தலைமுறைகளாக இயங்கிவருகிறது. இங்கே இயங்கும் சித்த மருத்துவமனையானது சுமார் 206 வருடங்களுக்கு மேலாக சித்த வைத்தியத்தில் சாதனை புரிந்து வருகிறது.
இதையடுத்து, சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலமானார். சேலம் மாவட்டத்திலுள்ள பூர்வீக இடமான சிவதாபுரத்தில் உள்ள அகஸ்தியர் மாளிகையில் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளது.
சிவராஜ் சிவக்குமார் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


