Type Here to Get Search Results !

நீ மட்டும்தான் எனக்கு புருசனா? ஓவரா கத்துற..! அப்ப அவனுங்க எல்லாம் யாரு..! அதிர வைத்த நிஷா

எதேச்சையாக மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த கணவருக்கு எக்கச்சக்கமான அதிர்ச்சி. பல ஆண்களுடன் இருந்த  புகைப்படங்களை பார்த்துவிட்டுஅதிச்சியடைந்த  கணவன், அதுகுறித்து கேட்டபோது மேலும் அதிர்ச்சியை தந்தார் மனைவி. 


‘நீ மட்டும்தான் எனக்கு புருச மாதிரி கத்துற.. அப்ப அவனுங்க எல்லாம் யாருன்னு நினைச்ச.. அவனுங்களும் என்க்கு தாலி கட்டின புருசனுங்கதான்’என்று சொன்னால் அதிர்ச்சி வராமல் இருக்குமா என்ன? இது போதாது என்று நிஷாவின் அம்மா கொடுத்த அதிர்ச்சி இருக்குதே...!  ‘நான் கொடுத்த ஆலோசைப்படிதான் அவள்  7 பேரையும் திருமணம் செஞ்சுக்கிட்டா’ என்று சொல்லி இருக்கிறார்.


மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தை சேர்ந்த பாலகுரு லாரி டிரைவர். இவர் முகநூலில் அதிக நேரத்தை செலவிடும் பழக்கம் உள்ளவர். இந்தநிலையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த ரஜபுநிஷா என்ற இளம்பெண் நட்பாகி இருக்கிறார். நட்பு காதலாகி கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறது. இருவீட்டாரின் சம்மதத்தோடு பாலகுரு – ரஜபுநிஷாவின் திருமணம், மணக்குடி பொரையான்கோவியிலில் நடந்திருக்கிறது.


திருமணத்திற்கு பின்னர் சேந்தங்குடி சிவப்பிரியா நகரில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். பாலகுரு லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இது நிஷாவுக்கு ரொம்பவே வசதியாகிப்போனது. பல ஆண்களுடன் செல்போனில் பிசியாக இருந்துள்ளார்.


இந்தநிலையியல், வெளியூரில் இருந்த பாலகுரு, எப்போது போன் செய்தாலும் உடனடியாக ரஜபுநிஷாவை தொடர்புகொள்ள முடியவில்லை. பாலகுருவின் தொடர்ந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததால், உடனடியாக பாலகுருவிடம் பேச முடியவில்லை ரஜபுநிஷாவுக்கு. இதனால், சந்தேகம் அடைந்த பாலகுரு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதையடுத்து, ரஜபுநிஷா குளிக்கப்போன நேரத்தில் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அதில் அவர் பல ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்துள்ளார்.


ஆத்திரமடைந்த பாலகுரு, ‘இந்த நாய்கள் எல்லாம் யாரு? அவங்களோட உனக்கு என்ன பழக்கம் என்று சத்தம் போட, நீ மட்டும்தான் எனக்கு புருசன் மாதிரி கத்துற.. அப்ப அவனுங்க எல்லாம் யாருன்னு நினைச்ச.. அவனுங்களும் என்க்கு தாலி கட்டின புருசனுங்கதான்’’ என்று சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.


என்னடி சொல்லுற..?’என்று பாலகுரு கேட்க, ‘ஓ.ஓ.. உனக்கு புரியலியா.. அப்ப விளக்கமா சொல்றேன்… நான் பணத்துக்காகத்தான் உன்னை திருமணம் செஞ்சுக்கிட்டேன். இதே மாதிரிதான் 7 பேரை திருமணம் செஞ்சிருக்கேன். இப்போ திண்டுக்கல் வேடசந்தூர்ல இருக்குற பார்த்திபனை லல் பண்ணி கல்யாணமும் செஞ்சுட்டேன். நீ இதுல இடைஞ்சலா இருந்தா..! புருசன்னுகூட பார்க்க மாட்டேன்..! போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்..! என்று சொன்னதும் , என் மனைவி  நிஷாவா இப்படி பேசுகிறாள் என்ற மன உளைச்சலானார் பாலகுரு.



இந்தநிலையில், வெளியூரில் இருந்து திரும்பி வந்து, இது பற்றி விலாவரியாக பேசலாம் என்று வீட்டுக்கு போனால், அங்கே நிஷா இல்லை. 70 ஆயிரம் பணமும், நகையும் இல்லை.  நிஷா ஓடிப்போதை புரிந்துகொண்ட பாலகுரு, நிஷாவின் அம்மாவுக்கு போன் போட்டு சத்தம் போடவும், ‘சும்மா சத்தம் போடாத, என் ஐடியாப்படிதான் அவ 7 பேரையும் கல்யாணம் கட்டிக்கிட்டா. உன்ன போனா போகுதுன்னு விட்டு வச்சிருக்கோம் … என்று மிரட்டவும் ஆடிப்போன பாலகுரு, போலீசில் புகார் அளித்திருக்கிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies