ராமநாதபுரம் அருகே தனது 10,12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை மீது கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவுசெய்து அந்த நபரை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மகிளா கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலியல் வன்கொடுமையை செய்த மாரிமுத்துவை சாகுவரையிலும் தூக்கிலிட வேண்டும் என்றும், 8 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கு 10 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று இவரது மனைவி வேலைக்குச் சென்ற சமயம் பார்த்து அவரது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தாயாரிடம் குழந்தைகள் கூறியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த தாய் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த கீழக்கரை காவல்துறையினர், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்னர்.
பின்னர் இந்த வழக்கு மகிளார் கோர்ட்டில் நடந்து வந்தது. அவ்வழக்கில் இன்று மாரிமுத்துவுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.


