அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் சசிகலா மீது சட்ட நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா நேற்று சாலை மார்க்கமாக சென்னை வந்தார். பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட போது, அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டிருந்ததால், தமிழக எல்லையை நெருங்கிய போது, அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.
பிறகு, சசிகலா வேறு ஒரு காருக்கு மாறி பயணத்தை தொடர்ந்தார். அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியின் கார் என்பதால், கொடியை அகற்ற முடியாத நிலை உருவானது.


