திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்துகொண்டு மரங்கள் நடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கமானது, மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. ஆகவே, இந்த முயற்சியால் தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனால், தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் மதிப்புமிக்க மரங்கள் நடும் பணியை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள்.
இந்தப் பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும், ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இச்சிபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி திரு.சிவசாமியின் நிலத்தில் மரம் நடும் பணி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார், 9 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் இப்பணியில் சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரங்கள் நடலாம். விருப்பமுள்ளவர்கள் 94425 90016 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தாங்கள் முன்பதிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.


