தேமுதிகவின் கட்சி தலைமை அலுலவகத்திற்கு 75 கார்களில் ஊர்வலமாக வந்த தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தேமுதிக தொடங்கப்பட்டு, அக்கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று தேமுதிகவின் 21வது கொடி நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்து கொடியேற்றி சிறப்பித்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திலிருந்து தேமுதிக தொண்டர்கள் காரில் அணிவகுத்தவாறு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து 2 பெண் குழந்தைகளுக்கு ஜனனி, விஜயலதா என விஜயகாந்த் பெயர் சூட்டினார். அத்துடன் அங்கிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு 75 வாகனங்களில் ஊர்வலமாகச் சென்ற தேமுதிகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி கூடுதல் அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


