தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உடனடியாக 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே தமிழக அரசின் உதவிகளை பெறலாம் என்றார்.
இந்த சேவை மையத்தில் முதல்வர் அல்லது மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 1100 உதவி சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டால் அதற்கான பலன் கிடைக்கும் என்றும் கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்கான் 1100 என்ற சேவை மையத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும், முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1100ஐ தொடர்பு கொண்டு அளிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


