இன்று கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 2019-2020ஆம் ஆண்டுக்கான விருதுகளை கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
இதில், 128 நபர்களுக்கு கலைமாமணி, 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இதில், சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜா தேவி உள்பட 134 பேருக்கு நேற்று விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், திரைத்துறையில் பல சாதனைகள் புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தால் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட இசை துறையினர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் ஸ்டன்ட் மாஸ்டர்கள் உட்பட பல பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என மொத்தம் 42 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திரையுலக பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், நடிகைகளில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், தேவதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, மதுமிதா ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
இசை துறையைப் பொருத்தவரை இசையமைப்பாளர் டி இமான் தீனா, பாடகர்கள் ஜமுனாராணி, சுஜாதா அனந்து ஆகியோரும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோரும், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவிமரியா ஆகியோர் இந்த விருதை பெற்றனர்.
மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தினேஷ் , நடன இயக்குனர்கள் சிவசங்கர் ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர் காமகொடியன், காதல்மதி, வசனகர்த்தா பிரபாகர், வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி, ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், மற்றும் ஒப்பனையாளர்கள் சண்முகம், சபரிகிரீசன், புகைப்படக் கலைஞர் சிற்றரசு, பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப், மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு, ஷேனை வாசிப்பாளர்கள் பல்லேஷ்–கிருஷ்ண பல்லேஷ் மற்றும் தபேலா வாசிப்பாளர் வி.எல்.பிரசாத் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.




