இங்கே கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது தெளிவாக தெரிகிறது என்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி முடித்த மு.க.ஸ்டாலின், தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்,
மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்ற அறிவிப்புடன் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இதற்குயிடையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற வாசகத்தை முன்வைத்து கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், பரமக்குடி ராமநாதபுரங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பிரச்சாரத்திற்கு வந்திருக்கும் மக்களின் கூட்டத்தை பார்த்தால் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று விடும் என்பது தெரிகிறது. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை உடனடி எடுக்க தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.
ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில 100க்கு குறைந்த பட்சம் 95 மனுக்களுக்கு முடிந்தவரை தீர்வு காணப்படும் என்று கூறினார். மேலும் இயற்கை சீற்றத்தால் நிவர், புரெவி போன்ற புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய மு.க.ஸ்டாலின், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


