Type Here to Get Search Results !

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால், நீங்கள் தட்டி கேட்கலாம் -மு.க.ஸ்டாலின் #Dmk, #MK_Stalin

சிவகாசியில் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால், நீங்கள் தட்டி கேட்கலாம். 



பட்டாசு தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் திமுக என்றும் உறுதுணையாக இருக்கும். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்த கட்சி திமுக. அதாவது, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி கொண்டே போகிறது மத்திய அரசு.


அதிமுக அரசு கடைசி நேர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 3 மாதங்களில் 2800 கோடி ரூபாய்க்கு டெண்டர் நடந்துள்ளது. அரசு பணத்தை சுரண்டுவதற்கு டெண்டர் கொள்ளை அடிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான ஆட்சி. 



முறைகேடான டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது வரை நியாயம் கிடைக்கவில்லை. 80 கோடி மணிமண்டபம் கட்டிய நீங்கள் ஜெயலலிதா மரணம் குறித்து ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்காவிட்டால் விதிமுறை மீறி சென்று இருப்பேன்


திமுக ஆட்சி வந்து 100 நாட்களுக்குள் உங்கள் குறை தீர்க்கப்படும். பிரச்சனை தீர்க்க படா விட்டால் முதலமைச்சர் அறைக்கே வந்து கேள்வி கேட்கலாம். உள்ளாட்சியில் நல்லாட்சி என பெயர் பெற்றவர் நான். உள்ளாட்சி துறை அமைச்சரை ஊழல் அமைச்சர் என அழைப்பது சரியாக இருக்கும். 


மாஸ்க், துடைப்பம், பிளிச்சிங் பவுடர் என அனைத்திலும் ஊழல் செய்த ஆட்சி இது.பட்டாசு தொழிலாளர்களுக்கு திமுக நிச்சியம் என்றும் துணை நிற்கும். எவ்வளவோ பணி செய்து இருக்கின்றோம் ஆனால் நான் என்றும் கொரானா காலத்தில் செய்த பணியையே நினைத்து பெருமை படுகிறேன். மாவட்டத்தின் பெரிய எதிர்பார்ப்பான அழகர் அணை திட்டத்தினை திமுக ஆட்சி நிறைவேற்றும். 100 நாட்களுக்குள் பிரச்சனைகள் தீர்க்க தனி அறை அமைக்கப்படும்” எனக் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies