ரஜினியிடம் ஆதரவு கேட்டீர்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
வருகிற சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்துகட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடத்தொடங்கி விட்டன. இதில், முதல் ஆளாக மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முதல் கட்ட பரப்புரையை தொடங்கி முடித்துவிட்டார்.
இதனிடையே, ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக கூறிவந்த உடல் நிலையில் காரணமாகக் கூறி, தான் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம், ரஜினியின் ஆதரவு கேட்டீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எந்த கட்சியிலும் சேரலாம் என்பதே போதும். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.