மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் அமைச்சர்கள் அஇஅதிமுகவின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
விழாவில், பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை பற்றி கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர், அம்மா அவர்களின் ஆட்சியை அமைப்போம் அதுதான் நமது லட்சியம் அம்மாவின் நினைவிடத்தில் நாம் அத்தனை பேரும் நன்றி செலுத்துவதற்கு வீர சபதம் ஏற்போம் என்று உரையாற்றினார்.
இவ்விழாவில், கலந்து கொண்ட பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்று கூறினார்.



