Type Here to Get Search Results !

பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்…! மகளிரை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…!! அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க..!!! #Edappadi_Palanisamy

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”, ”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.




சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக 28,000 கோடி மட்டும்தான் கொடுத்தார்கள்.


ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 80,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு எட்ட வேண்டிய தாய் சேய் நல பணி இலக்கை நாம் இப்போதே எட்டி விட்டோம்.




2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி தற்போது 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.மருத்துவக் கல்லூரியில் 317 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.கல்லூரி கட்டணத் தொகையை செலுத்த முடியாத மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை செலுத்தும்.


மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும் சாதித்துக் காட்டுவோம். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் உங்களது வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies