இந்தியாவில் தற்போது போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 2020 அக்டோபர் மாதத்தில் அறிமுகபடுத்தப்பட்டது. ஆனால், அறிமுகமான குறுகிய காலத்திலேயே போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்தது.
புது மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி போக்கோ சி3 3 GB + 32 GB ரூ. 6,999 விலையிலும், மற்றும் 4 GB + 64 GB மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்தோடு, HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 MP பிரைமரி கேமரா, 2 MP மேக்ரோ மற்றும் 2 MP டெப்த் சென்சார், 5 MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது, டூ டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதால், அதிக நேரம் ஜார்ஜ் இருக்கும்.