சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி அப்ரூவராக மாறி, நடந்த சம்பவங்களை தெளிவாகத் தெரிவித்துவிட்டார். காவலர் முத்துராஜும் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான பிடி இறுகிக் கொண்டிருக்கிறது.


