கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 220 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்றும் இன்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,500ஐ நெருங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. இன்று 220 பேருக்கு தொற்று உறுதியானதால் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,459 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,491 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.