கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம்நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன்மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது:
நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்குவெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும்.
முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்துபார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லாகரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில்சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது.
செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
கொட்டகை அமைப்பு
கொட்டகையின் நீளம் 20 அடி. அகலம் 10 அடி. தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல், 3 அடி உயரத்துக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை, கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
கொட்டகையின் முன்பகுதியில் 40 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு மூன்று புறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு, அதன் மீது நைலானாலான மீன் வலை அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்டுக்கோழிகளை வளர்க்க, இந்த அளவு போதுமானது.
கோழிகளால் இங்கு தாராளமாக நடமாட முடியும். தேவையான வெயில் கிடைக்கும். அதேசமயம் வெளியேற முடியாது. நிழல் தேவை என்றால், கொட்டகைக்குள் வந்து அடைந்து கொள்ளும். தினமும் காலை 6 மணிக்கு கொட்டகையைத் திறந்து விட்டு, மாலை 6 மணிக்கு கொட்டகைக்குள் கோழிகளை அடைத்து விடலாம். வெளிப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பாம்பு, காட்டுப்பூனை போன்ற ஜீவராசிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அமைக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
4 மாதம் வரை குஞ்சுத்தீவனம் !
பொரித்ததில் இருந்து 15 நாட்கள் வரை ஒரு கோழிக்குஞ்சுக்கு தினமும் சுமார் 5 கிராம் வரை குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். அடுத்த15 நாட்களுக்கு தினமும் 10 கிராம் அளவுக்கு குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாத வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 4-ம் மாதத்திலிருந்து வளர்ந்த கோழிகளுக்கான தீவனத்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நாமே தயாரித்துக் கொடுக்கலாம்.
கோழிகள் முட்டையிட்ட உடனே, ஒரு மண்பானையில் உமியைப் பரப்பி முட்டைகளை வைத்து ஈரத்துணியால் முடி வைக்க வேண்டும். முட்டைகள் சேர்ந்த பிறகு இன்குபேட்டரில் வைத்துப் பொரிக்க வேண்டும்.
21 நாளில் குஞ்சுகள் பொரித்துவிடும். பிறந்த குஞ்சுகளை சுமார் ஒன்றரையடி உயரம், 4 அடி விட்டத்துக்கு வட்ட வடிவில் அட்டைகளை வைத்து ப்ரூடர் (செயற்கை வெப்பம் ஏற்படுத்தும் விளக்கு) அமைத்து, அதற்குள் விட வேண்டும். ஒரு மாதம் வரை குஞ்சுகளுக்கு பல்பு மூலம் வெப்பம் கொடுக்க வேண்டும்.