Type Here to Get Search Results !

நாட்டுக்கோழி வளர்ப்பு

Top Post Ad

நாட்டுக்கோழி வளர்ப்பு 


நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்...


கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர். நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் தீடிர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருமானம் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன. 



கிராம புறங்களின் வாழும் மக்களின் தேவையை நிறைவு செய்வதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு கோழிகள் வளர்ப்பதன் மூலம்  தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், இத்தொழில் உதவுகிறது. கஷ்டப்பட்டு கைக்கால் தேஞ்சு போகும் மனிதர்களுக்கு ஈஸியான வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் துணை நிற்கிறது.


வீட்டில் இருந்த படியே மாதம் மாதம் வருமானம் பெற ஓர் அரியவாய்ப்பை இந்த தொழில் அளிக்கிறது. மேலும் நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. சத்துக்கள் நிறைந்த நாட்டுக்கோழி இறைச்சிக்கு நாடெங்கும் அமோக வரவேற்பு உள்ளது. கிராம மக்களின் ஊட்டச்சத்து நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் தன்மை நாட்டுக்கோழிகள் இறைச்சிக்காவும், முட்டை உற்பத்தியாகவும், பல்வேறு ஆராய்ச்சியின் விளைவாகவும் உருவாக்கப்படுகிறது. 

அதிக எண்ணிக்கையில் குறுகிய இடத்தில் அதிக லாபம் பெறலாம். எனவேதான் இந்த தொழில் நகரப்பகுதியிலும் வளர்ந்து வருகிறது. கிராமப்புற பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், நலிந்த பிரிவினர், தொழில் செய்ய விரும்புவோர் இந்த தொழிலை தொடங்கி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

நாட்டுக்கோழி இனங்கள்: 


நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. 

அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.


  1. குருவுக்கோழி,
  2. பெருவிடைக்கோழி,
  3. சண்டைக்கோழி அசில்கோழி,
  4. கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
  5. கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
  6. கொண்டைக்கோழி,
  7. குட்டைக்கால் கோழி.
  8. உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்


மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு

ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.

மித தீவிர முறை

கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.


தீவிர முறை

கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை

கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
Meichala Valarndhaa Dhaan Athu Nattu Koli "மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
"பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்.

 நாட்டுக்கோழி பராமரிப்பு

இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)

குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.

வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)

இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு.
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து
கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.

முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )

ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.


கோடைகால பராமரிப்பு

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. 

கோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும்
.

குளிர்கால பராமரிப்பு

சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். 

கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை,எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும்.மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவைஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

தீவன கலவை (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்

1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.