Type Here to Get Search Results !

நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்

நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்



1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்


கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்



  ''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.

கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... 

கோழி வளர்ப்பு! 

நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.

வாரத்துக்கு 75 குஞ்சுகள் !

பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.

மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !



ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.

அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.

காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.

பேன்களைத் துரத்தும் மண்குளியல் !

                     நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். 

நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,
''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். 

ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.
இப்படித்தான் வளர்க்கணும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies