வனவிலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்:வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வால்பாறை பொதுமக்களுக்கு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருங்கள். வனவிலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் அறிவுறுத்திவுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். மற்ற நேரங்களில் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. ஆதலால் தமிழக அரசு கூறிய அறிவுறுத்தலின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவைகளை உணர்ந்து பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடுகள்.
வால்பாறையில் பசுமை தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடனிருங்கள்.வாவிலங்குகள் பறவைகளை அச்சுறுத்தும்விதமாக ராக்கெட், அணுகுண்டு போன்ற பட்டாசுகளை தவிர்த்துவிடுங்கள் என்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாட்டங்களின்போது விபத்துகள் ஏற்படுவதும், அதன் காரணமாகத் தீக்காயங்கள், பார்வையிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கவனக்குறைவாகப் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அத்தகைய விபத்துகளில், வெடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். காயம் ஏற்படுபவர்களில் நாற்பது சதவீதத்துக்கு அதிகமாக அதாவது ஐந்து பேரில் இருவருக்குக் கண்களில் காயம் ஏற்படுவதால் பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவும்.
வால்பாறை வனப்பகுதி பல்லுயிர் வாழும் தன்மை கொண்டது. எனவே இங்கு புலி, சிறுத்தை, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, கடமான், காட்டுமாடு, செந்நாய் மற்றும் இருவாட்சி பறவைகள் போன்ற அரியவகை பறவைகள் வாழும் பகுதி என்பதால் வானத்தை ஒட்டியுள்ள மக்கள் வானத்தில் சேந்து வெடித்து தீப்பொறி உண்டாக்கும் (ராக்கெட்) பட்டாசுகளை வெடிப்பதை தவிருங்கள். அதேபோல், அதிக சத்தத்துடன் வெடிக்கும் அணுகுண்டு போன்ற வெடிகளை வெடிப்பதை தவிர்க்கவும்.
மேலும், வனவிலங்குகளை, பறவைகளை அச்சுறுத்தும்விதமாக எந்தவொரு பட்டாசுகளையும் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க்கவும். முடிந்தவரை மாசற்ற வனமாக இருக்க அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். அனைவரும் பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டுகிறேன்.