எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அக். 21.,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழனிசாமி, இது தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை செய்யப்படுவதாகவும், அவர் இன்று மதியமே வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


